மழையால் கைவிடப்பட்ட ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டி!

Updated: Tue, Dec 17 2024 20:18 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான் அணியானது தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. 

இதையடுத்து ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 17)  ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி ஏற்கெனவே டி20 தொடரை வென்றுள்ள நிலையில் ஒருநாள் தொடரிலும் அதனை தொடரும் முனைப்பில் விளையாடவுள்ளது.

அதேசமயம் டி20 தொடரில் அடைந்த தோல்விக்கு இந்த தொடரில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்ள இருந்தது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் இப்போட்டியானது 28 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. 

இதனையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பென் கரணாம் - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மருமணி 6 ரன்னிலும், பிரையன் பென்னட் ரன்கள் ஏதுமின்றியும், தியான் மேயர்ஸ் 12 ரன்னிலும், பென் கரண் 15 ரன்னிலும், சீன் வில்லியம்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தன்ர். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் ஜிம்பாப்வே அணி 9.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வந்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால் அச்சமயத்தில் மீண்டும் மழை குறுக்கிட்தன் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் இப்போட்டியானது அத்துடன் கைவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை