டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே ஆசை - சூர்யகுமார் யாதவ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங். ஃபில்டிங் என அனைத்திலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணியில் தற்போது 5ஆவது அல்லது 6ஆவது வீரராக களமிறங்க சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு தரப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “எனக்கு எந்த வரிசை இடம் கிடைத்தாலும் சிறப்பாக விளையாடுவேன். தற்போது அணியின் தேவைக்காக சுழற்பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். வலைப் பயிற்சியில் ஏற்கனவே பந்துவீச தொடங்கி விட்டேன்.
போட்டியின் போது எனக்கு வாய்ப்பு தரப்பட்டால், பந்துவீச்சு திறமையை காட்டுவேன். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே என் கனவு, ஆசை. சிவப்பு பந்து கிரிக்கெட் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களை ரசிகர்கள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவனுடன் ஓப்பிட்டு கூறுகிறார்களே, அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.. இதனை கேட்டு சிரித்த சூர்யகுமார் யாதவ், “என்ன வச்சு காமெடி பண்ணாதீங்க, நான் இப்போது தான் இந்தியாவுக்காக 6 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறேன்” என்று பதில் அளித்தார்.
இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ்க்கு பேட்டிங் வரிசையில் 4ஆவது இடம் தர வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ரிஷப் பந்த் அதிரடியாக ஆடக் கூடியவர். இதனால் அவருக்கு பேட்டிங் வரிசையில் 6ஆவது இடத்தை வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.