விராட் கோலிக்கு சாஹித் அஃப்ரிடியின் அறிவுரை!

Updated: Sat, Nov 13 2021 16:18 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகுவதாகக் கடந்த செப். மாதம் அறிவித்தார். அதேபோல ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் விலகினார்.

இது அவரது ரசிகர்களுக்கு மட்டமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. உலகக் கோப்பைக்குப் பிறகு இந்தியா வரும் நியூசிலாந்து அணி 3 டி20 போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. 

இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, பும்ரா, ஷமி ஆகிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய டி20 அணியில் ரேஹித் சர்மா கேப்டனாகவும், ராகுல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ரேஹித் சர்மாவுக்கு முழு நேர கேப்டனாக இது முதல் தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதை பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி வரவேற்றுள்ளார்.

இது குறித்து பேசுய அவர் "ரோஹித் கேப்டனாக பொறுப்பேற்கும் திறன் கொண்டவர் தான். நான் அவருடன் ஒரு வருடம் (டெக்கான் சார்ஜர்ஸில்) விளையாடியுள்ளேன். அவர் அற்புதமான கிரிக்கெட் வீரர். தேவைப்படும் இடங்களில் நிதானமாக இருப்பதோடு, தேவைப்படும்போது ஆக்ரோஷத்தையும் காட்டுகிறார். அவரது இரு வேறு பரிமாணங்களையும் நாம் பார்க்கலாம். 

என்னைப் பொறுத்தவரைக் கோலி அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும். அவர் வீரராக மட்டும் தொடர்ந்து விளையாட வேண்டும். அப்போது தான் அவர் மீதான அழுத்தம் குறையும். 

Also Read: T20 World Cup 2021

இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பது சுலபமான காரியம் இல்லை. வீரராக மட்டும் தொடர்ந்தால் தான் கிரிக்கெட்டையும் பேட்டிங்கையும் அவரால் ரசித்து விளையாட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை