மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா!

Updated: Sun, Oct 15 2023 16:07 IST
மிக்கி ஆர்த்தருக்கு தனது பாணியில் பதிலடி கொடுத்த ஆகாஷ் சோப்ரா! (Image Source: Google)

ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 12ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3ஆவது வெற்றியை பதிவு செய்தது. அஹ்மதாபாத் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக நட்சத்திர வீரர்களான கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக பாண்டியா, ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 191 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 86 ரண்களும் 53 ரன்களும் எடுத்து 117 ரன்கள் மீதம் வைத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

அதன் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் பாகிஸ்தானை உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து 8ஆவது முறையாக தோற்றடித்த இந்தியா தங்களுடைய வெற்றி சரித்திரத்தை தொடர்கிறது. இந்நிலையில் இப்போட்டி நடைபெற்ற அஹ்மதாபாத் மைதானத்தில் இந்தியா அசத்திய தருணங்களில் உத்வேகத்தை கொடுக்கக் கூடிய “சக்தே இந்தியா” பாடல் ஒலிபரப்பப்பட்டது போல் பாகிஸ்தானின் “தில்தில் பாகிஸ்தான்” பாடல் ஒளிபரப்பப்படவில்லை என்று மிக்கி ஆர்தர் விமர்சித்துள்ளார்.

அத்துடன் பெரும்பாலும் இந்திய ரசிகர்கள் மட்டுமே மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் விமர்சித்த பாகிஸ்தான் அணியின் இயக்குனரான அவர் இது ஐசிசி நடத்தும் தொடரை போல் அல்லாமல் பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாக கடுமையாக சாடினார். மேலும் அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்தித்து இவை அனைத்துக்கும் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஹைதராபாத் மைதானத்தில் பாகிஸ்தான் ஜீதேகா (பாகிஸ்தான் வெல்லும்) என்ற குரல் ரசிகர்களுக்கு மத்தியில் ஓங்கி ஒலித்து பாகிஸ்தான் அணிக்கு பெரிய ஆதரவு கிடைத்த போது இலங்கை அணி நிர்வாகம் உங்களைப் போல் புகார் செய்யவில்லை என அவருக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது பதிவில், “டிஜே பாபு எங்களுடைய பாடலை போடுங்கள் என்று கேட்கிறீர்களா? ஹைதராபாத் ரசிக கூட்டத்தில் பாகிஸ்தான் ஜீதேகா என்ற குரல் எழும்பிய போது இலங்கை நிர்வாகம் புகார் செய்ததை நாம் கேட்டோமா? நரேந்திர மோடி ம்மைதானத்தில் இன்று தில்தில் பாகிஸ்தான் பாடல் ஒருமுறை ஒலிபரப்பப்பட்டிருந்தால் கூட நான் ஆச்சரியப்படுவேன்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை