இந்திய மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஷிவ் சுந்தர் தாஸ் நியமனம்!

Updated: Tue, May 18 2021 15:08 IST
Former India opener Shiv Sunder Das appointed women's team batting coach (Image Source: Google)

இந்திய மகளிர் அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லவுள்ளது. 

இந்நிலையில் இந்திய மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரமேஷ் பவார் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். 

இதையடுத்து தற்போது மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளரை பிசிசிஐ இன்று நியமித்துள்ளது. 

அதன்படி இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிவ் சுந்தர் தாஸ் மகளிர் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், டெல்லி அணியின் அபே சர்மா பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷிவ் சுந்தர் தாஸ் இந்திய மகளிர் ஏ அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை