இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இந்தியாவும், 2ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.

Advertisement

இரண்டாவது போட்டியின் 2ஆவது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்திருந்த போது ரி‌ஷப் பந்த் களம் இறங்கினார். அப்போது ஹனுமா விஹாரியும் களத்தில் இருந்தார். ஆனால் ரி‌ஷப் பந்த் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ரபாடா வீசிய பந்தை அடித்து ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

Advertisement

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளுக்கும் வெற்றிபெற சமமான வாய்ப்பு இருந்தது. இதை இந்தியா தவறவிட்டது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் ரி‌ஷப் பந்த் ஆடியதை குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரி‌ஷப் பந்த் ஆடிய ஷாட் குறித்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ரிஷப் பந்த் அப்போது தேர்வு செய்த ஷாட்டை பார்க்கையில் அவர் போஸ்ட்பெய்ட் சர்வீசில் இருந்து பிரீபெய்டு சர்வீசுக்கு மாறி வருவதுபோல் இருந்தது. 

மேலும் காயம் காரணமாக சிராஜ் ஆடவில்லை என்றால் இஷாந்த் சர்மா கட்டாயம் இடம்பெற வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News