BAN vs IND: இந்திய அணியில் தொடரும் வீரர்களின் உடற்த்தகுதி சர்ச்சை; டிராவிட்டின் பதில்!

Updated: Thu, Dec 08 2022 10:57 IST
Image Source: Google

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் வங்கதேச அணி போராடி வெற்றிபெற்ற நிலையில், அடுத்து இரண்டாவது போட்டி துவங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணியில் டாப் ஆர்டர் சொதப்பிய இலையில், மிடில் வரிசை வீரர்கள் முகமதுல்லா 77, மெஹிடி ஹாசன் 100 ஆகியோர் அபாரமாக செயல்பட்டு அசத்தியதால், 69/6 என இருந்த வங்கதேச அணி இறுதியில் 271/7 ரன்களை குவித்தது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் 82, அக்சர் படேல் 56 ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். கட்டை விரல் காயம் காரணமாக அவதிப்பட்ட ரோஹித் ஷர்மா, இறுதி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அப்போது கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரோஹித் ஒரு சிக்ஸரை மட்டும் அடித்ததால், இந்திய அணி 266/9 ரன்களை மட்டும் சேர்த்து, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இப்போட்டி முடிந்தப் பிறகு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது பேசிய டிராவிட், “ரோஹித் சர்மாவுக்கு கை கட்டைவிரலில் ஏற்பட்ட காயம், சீக்கிரம் குணமடைவதுபோல் தெரியவில்லை. கட்டைவிரல் இடமாறியுள்ளது. இதனால், அவரை மூன்றாவது போட்டியிலிருந்து நீக்கியுள்ளோம். கட்டைவிரலில் வலி இருந்தும், ரோஹித் கடைசி நேரத்தில் களமிறங்கியது, அவரது போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது.

குல்தீப் சென், தீபக் சஹார் இருவரும் காயம் காரணமாக அவதிப்படுவதால், மூன்றாவது போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். மேலும் ‘ரோஹித் ஷர்மா டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா?’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த டிராவிட், “அதுகுறித்து இப்போதே சொல்ல முடியாது. அவர் பங்கேற்பாரா என்பதை உறுதிபட இப்போதே கூறிவிட முடியாது” என்றார்.

ஒருநாள் அணியிலிருந்து ஏற்கனவே ரிஷப் பந்த் விலகியிருந்தார். தற்போது ரோஹித் ஷர்மா, தீபக் சஹார், குல்தீப் சென் ஆகியோர் விலகியுள்ளதால், இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை