ஒருநாள் கிரிக்கெட்டின் ஓவர்களை குறைக்க வேண்டும் - ஆடம் ஸாம்பா!

Updated: Tue, Oct 11 2022 16:53 IST
Image Source: Google

டி20 கிரிக்கெட்டுக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் ஆர்வம் அதிகமாகி வருகிறது. இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் நடு ஓவர்கள் சுவாரசியமில்லாமல் இருப்பதாகப் பலரும் கூறுகின்றன. 

இதனால் ஒருநாள் கிரிக்கெட்டின் மவுசு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமில்லாமல், பென் ஸ்டோக்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் உள்ளிட்டு அதிரடி வீரர்கள் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து டி20 போட்டிகளில் விளையாடுவதும் ஒருநாள் கிரிக்கெட்டின் வீழ்ச்சியை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. 

இதுதொடர்பாக பேசிய பிரபல ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஸாம்பா, “ஒருநாள் கிரிக்கெட்டில் நடுவில் வீசப்படும் 10 ஓவர்களை நீக்க வேண்டும். அல்லது ஏதாவது செய்து சுவாரசியமாக்க வேண்டும். 20 முதல் 30 ஓவர்கள் வரை ஏதாவது போனஸ் அல்லது கூடுதல் ஃப்ரீ ஹிட்கள் கொடுக்க வேண்டும். கொஞ்சம் சுவாரசியமாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் டி20 கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச், உஸ்மான் கவாஜா, ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் லையன் உள்ளிட்டோரும் ஒருநாள் கிரிக்கெட்டின் வீழ்ச்சி குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை