கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Sep 20 2024 12:50 IST
Image Source: Google

Guyana Amazon Warriors vs St Kitts and Nevis Patriots, Match 20 Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நடப்பு சிபில் கிரிக்கெட் தொடரில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. அதேசமயம் பேட்ரியாட்ஸ் அணியானது விளையாடிய 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

GAW vs SKN: Match Details

  • மோதும் அணிகள்- கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ்
  • இடம் - புரோவிடன்ஸ் மைதானம், கயானா
  • நேரம் - செப்டம்பர் 21, அதிகாலை 4.30 மணி (இந்திய நேரப்படி)

GAW vs SKN: Live Streaming Details

கரீபியன் பிரிமிய லீக் டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் குறிப்பிட்ட சந்தாவை செலுத்தி நேரலையில் பார்க்க முடியும்.

GAW vs SKN: Head-to-Head

  • Total Matches: 20
  • GAW: 13
  • SKN: 06
  • No Result: 01

GAW vs SKN: Pitch Report

நடப்பாண்டு சிபிஎல் கிரிக்கெட் தொடரில் கயானாவில் நடைபெறும் முதல் லீக் போட்டி இதுவாகும். இந்த மைதானத்தில் இதுவரை 35 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. இதில் 17 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும், 14 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு பந்துவீச்சுக்கு சாதகமான இந்த அடுகளத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 128 ரன்களாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் சராசரி 95 ரன்களாகவும் உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும்.

Guyana Amazon Warriors vs St Kitts and Nevis Patriots Possible XIs

கயானா அமேசன் வாரியர்ஸ்: டிம் ராபின்சன், ஷாய் ஹோப் (கே), ஷிம்ரோன் ஹெட்மையர், மொயின் அலி, கீமோ பால், டுவைன் பிரிட்டோரியஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், குடாகேஷ் மோட்டி, கெவின் சின்க்ளேர், ஷமர் ஜோசப், நாதன் சௌடர்

செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ்: எவின் லூயிஸ், ஆண்ட்ரே ஃபிளெட்சர் (கே), கைல் மேயர்ஸ், ரிலீ ரோசோவ், மிகைல் லூயிஸ், வனிந்து ஹசரங்க, ரியான் ஜான், ஜோசுவா டா சில்வா, ஒடியன் ஸ்மித், தப்ரைஸ் ஷம்சி, அன்ரிச் நோர்ட்ஜே

GAW vs SKN: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்: ஆண்ட்ரே பிளெட்சர்
  • பேட்டர்ஸ்: ஷிம்ரோன் ஹெட்மியர், எவின் லூயிஸ், ஷாய் ஹோப்
  • ஆல்-ரவுண்டர்: ரொமாரியோ ஷெப்பர்ட், டுவைன் பிரிட்டோரியஸ், வனிந்து ஹசரங்க, கைல் மேயர்ஸ், கீமோ பால்
  • பந்துவீச்சாளர்கள்: அன்ரிச் நோர்ட்ஜே, குடாகேஷ் மோட்டி

GAW vs SKN Match 21 Dream11 Prediction, Today Match GAW vs SKN, GAW vs SKN Dream11 Team, Fantasy Cricket Tips, GAW vs SKN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the Caribbean Premier League 2024 

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை