இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த கெயில், ரோட்ஸ்!

Updated: Wed, Jan 26 2022 14:44 IST
Image Source: Google

நாடு சுதந்திரமடைந்து 75ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், 73ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையேற்றார். அவா் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பாதுகாப்புப் படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

ஆண்டுதோறும் இனி ஜனவரி 23ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு குடியரசு தினத்தைக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுதந்திரப் போராட்ட வீரா் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான ஜனவரி 23ஆம் தேதி தொடங்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மகாத்மா காந்தியின் நினைவு தினமான (தியாகிகள் தினம்) ஜனவரி 30ஆம் தேதி நிறைவடையும்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில், தென் ஆப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் இந்தியாவுக்குக் குடியரசு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து கெயில் தனது ட்விட்டர் பதிவில், “73ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். இன்று காலையில் பிரதமர் மோடியிடமிருந்து தனிப்பட்ட தகவல் எனக்கு வந்தது. அவரிடமும் இந்திய மக்களிடமும் எனக்குள்ள வலுவான பிணைப்பை இது உறுதிப்படுத்துகிறது.  அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். 

 

ஜாண்டி ரோட்ஸ் தனது பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்கு வரும் போதும் நான் ஒரு தனி மனிதனாக மிகவும் வளர்ந்துள்ளேன். இந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், எனது முழுக் குடும்பமும் இந்தியா முழுவதும் குடியரசு தினத்தை கொண்டாடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை