ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று தேதி மதியம் 1.30 மணிக்கு துபாயில் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 10 அணிகளில் வெறும் 77 இடங்கள் மட்டுமே காலியாக இருக்கும் நிலையில் அதை பிடிப்பதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 333 வீரர்கள் இந்த ஏலத்தில் போட்டியிட உள்ளது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்த ஏலத்தில் வழக்கம் போல வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக யாரை வாங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

இந்நிலையில் இந்த ஏலத்தில் முதல் முறையாக பங்கேற்கும் தன்மை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கினால் மிகவும் நன்றாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்காவின் இளம் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 8 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த தென் ஆப்பிரிக்க பவுலர் என்ற ஜாம்பவான் லன்ஸ் க்ளூஸ்னர் (1999இல் 17) சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்தார். மேலும் 23 வயதிலேயே டேல் ஸ்டைன் போன்ற வெறித்தனமான வேகத்தில் வீசிய அவர் ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்று அடுத்த தலைமுறை நட்சத்திரமாக தன்னை அடையாளப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் சென்னை அணிக்காக வாங்கப்பட்டால் மகத்தான கேப்டனாக போற்றப்படும் எம்எஸ் தோனி தலைமையில் விளையாடி நிறைய அனுபவத்தை கற்கும் வாய்ப்பு தமக்கு கிடைக்கும் என்று கோட்ஸி கூறியுள்ளார். எனவே தோனி தலைமையில் விளையாடும் அதிர்ஷ்டமான வாய்ப்பு இந்த ஏலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், “ஒருவேளை எம்எஸ் தோனி தலைமையில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தால் அது வரலாற்றின் ஒரு மகத்தான கேப்டன் தலைமையில் விளையாடி நிறைய திறமைகளையும் அனுபவத்தையும் கற்பதற்கான அற்புதமான வாய்ப்பை எனக்கு கொடுக்கும். சூப்பர் கிங்ஸ் குடும்பம் எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கிறது. சென்னை மிகவும் பவர்ஃபுல் மற்றும் மகத்தான அணியாக இருந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News