மாதாந்திர விருதுகள்: பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை பரிந்துரை பட்டியலை வெளியிட்டது ஐசிசி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஆடவர் மற்றும் மகளிருக்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இதில் ஆடவருக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து அணியின் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில் ஸ்டீவ் ஸ்மித் இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து சதங்களை விளாசியதுடன், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார். அதன் பின், நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், அரையிறுதியில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத்தொடர்ந்து இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் பெயரும் இந்த பரிந்துரை பட்டியளில் இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் அவர் பிப்ரவரி மாத்தில் மட்டும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 101 என்ற சராசரியை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நியூசிலாந்தின் ஆல் ரவுண்டர் கிளென் பிலீப்ஸும் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த மாதம் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேற்கொண்டு ஃபீல்டிங்கிலும் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதன் காரணமாக இந்த ஐசிசி பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவர்களில் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒருவருக்கு விருது வழங்கப்படும்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனைகள் பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அலானா கிங், ஆல் ரவுண்டர் அனபெல் சதர்லேண்ட் மற்றும் தாய்லாந்து அணியைச் சேர்ந்த திபட்சா புத்தாவோங் ஆகியோர் இந்த விருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து ஒருவர் பிப்ரவர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீராங்கனை விருதை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.