ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய அப்ரார் அஹ்மத் - வைரலாகும் காணொளி!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சோபிக்க தவறி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களுக்கு ஆல் அவுட்டாந்து. இதில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 62 ரன்களையும், முகமது ரிஸ்வான் 46 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 20 ரன்னிலும், ஷுப்மன் கில் 46 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். அதன்பின் 56 ரன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை இழந்தார்.
இருப்பினும் மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி சதமடித்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய அணி 42.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரி அரையிறுதி சுற்று வாய்ப்பையும் உறுதிசெய்துள்ளது. இப்போட்டியில் சதமடித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அஹ்மத், இந்திய வீரர் ஷுப்மன் கில்லின் விக்கெட்டை கைப்பற்றியது அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. அதன்படி ஷுப்மன் கில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட 46 ரன்களைச் சேர்த்து தனது அரைசதத்தை நோக்கி விளையாடி வந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
அப்போது இன்னிங்ஸின் 18ஆவது ஓவரை அப்ரார் அஹ்மத் வீசிய நிலையில், அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மிடில் ஸ்டம்பில் வீசினார், அந்த பந்தை ஷுப்மன் கில் தடுத்து விளையாட முயற்சித்த நிலையில், அந்த பந்தாந்து அபாரமாக திரும்பியதுடன் ஷுப்மன் கில்லின் பேட்டில் படால் நேரடியா ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனை சற்றும் எதிர்பாராத ஷுப்மன் கில் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.