சாம்பியன்ஸ் கோப்பை 2025: வார்னர், பாண்டிங் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!

Updated: Fri, Feb 28 2025 09:37 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

அதேசமயம் குரூப் பி பிரிவில் இருந்து எந்த இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாடவுள்ளனர். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், இந்த வாழ்வா சாவா ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங், டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள்

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் 6 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக சிக்ஸர்களை விளாசி வீரர் எனும் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்லார். இதற்கு முன் ரிக்கி பாண்டிங் 374 ஒருநாள் போட்டிகளில் 159 சிக்ஸர்களை விளாசியதே சாதனையாக உள்ல நிலையில், கிளென் ஏக்ஸ்வெல் 147 போட்டிகளில் 154 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 

மேற்கொண்டு இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் 2 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது 300 சிக்ஸர்களையும் பூர்த்தி செய்வார். தற்போது அவர் 270 போட்டிகளில் விளையாடி 298 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இந்த மைல் கல்லை மேக்ஸ்வெல் எட்டும் பட்சத்தில் உலகளவில் 300 சர்வதேச சிக்ஸர்களை விளாசிய 14ஆவது வீரர் மற்றும் இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனைகளையும் படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வார்னரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் எனும் சாதனையை முன்னாள் வீரர் டேவிட் வார்னர் தன்வசம் வைத்துள்ளார். அவர் ஆஃப்கானுக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடி 103 என்ற சராசரியில் 309 ரன்களைக் குவித்துள்ளார். இந்நிலையில் மேக்ஸ்வெல் இந்த போட்டியில் 15 ரன்களை எடுக்கும் பட்சத்தில் வார்னரின் இந்த சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.அந்தவகையில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக இதுவரை 4 ஒருநாள் போட்டிகாளில் விளையாடியுள்ள கிளென் மேக்ஸ்வெல் 295 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு இரட்டை சதம் மற்றும் ஒரு அரை சதமும் அடங்கும். 

ஒருநாள் போட்டியில் 4000 ரன்கள்

இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் 17 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 4000 ரன்களை பூர்த்தி செய்வார். இதனை அவர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டும் 19ஆவது வீரர் எனும் பெருமையையும் அவர் பெறுவார். இதுவரை அவர் 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34.04 என்ற சராசரியில் 3983 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் துவார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்ஸர் ஜான்சன், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேத்யூ ஷார்ட், ஆடம் ஸாம்பா, கூப்பர் கன்னோலி(ரிஸர்வ் வீரர்)

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை