விராட் கோலிக்கு அட்வைஸ் வழங்கிய மைக்கேல் வாகன்!

Updated: Thu, Jul 07 2022 22:27 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி முதல் இன்னிங்ஸில் 11 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த மோசமான ஆட்டம் காரணமாக அண்மையில் ஐசிசி வெளியிட்டிருந்த டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 9ஆவது இடத்திலிருந்து 13ஆவது இடத்திற்கு விராட் கோலி சரிவை சந்தித்துள்ளார்.

இன்று இந்திய கிரிக்கெட் உலகம் முழுவதும் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ள விஷயம் விராட் கோலியின் டி20 எதிர்காலம். இதனால் அடுத்து வரக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி புறக்கணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து கோலி பேட்டிங்கில் மோசமாக செயல்பட்டு வருவதால் அவரை தற்காலிக ஓய்வு எடுக்கச் சொல்லி பல முன்னணி வீரர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனும் பேசியுள்ளார். 

கோலி குறித்து பேசிய அவர் ,“விராட் கோலியை நான் உன்னிப்பாக பார்க்கிறேன். ஐபிஎல் தொடருக்கு பின் அவர் சிறிய ஓய்வு எடுத்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவருக்கு பெரிய ஓய்வு தேவை என்பது போல் எனக்கு தோன்றுகிறது. அவர் குறைந்தது 3 மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும். அதை செய்து ஒரு கடற்கரையில் போய் உட்காருங்கள். உங்களது குடும்பத்தினருடன் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள். அதை செய்யாவிடில் உங்களின் கிரிக்கெட் பயணம் முன்கூட்டியே முடிவு ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை