டி20 உலகக்கோப்பை : அஸ்வின் ரிட்டர்ன்ஸ்!

Updated: Wed, Sep 08 2021 22:23 IST
Image Source: Google

இந்திய அணியின் அனுபவ சுழற்பந்துவீச்சாளர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியின் துருப்புச்சீட்டாக விளங்கியவர். 

கடந்த 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வெல்ல இவரும் ஒரு காரணம். அதுமட்டுமில்லாமல் பல முக்கிய தொடர்களில் இவரது பங்கு இன்றியமையாததாக விளங்கியது.

ஆனால் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு இவரால் இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இந்திய அணியில் ஓங்கியது. இளம் வீரர்கள் வெளிநாட்டு மண்ணில் தங்கள் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி பேட்ஸ்மேன்களை நிலைகுழையச் செய்தனர். 

இதன் காரணமாக 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் அஸ்வினால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த அணி, இனி குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற கருத்துகள் வெளிவந்தன. 

ஆனாலும் ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினை ஏன், டி20 தொடரில் விளையாட வைக்க கூடாது என்ற விமர்சனங்களும் எழுந்தன. 

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 7ஆவது டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இது தமிழக ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் உலகக்கோப்பை தொடருக்கான முதல் தேர்வாக வாஷிங்டன் சுந்தர் தான் இருந்தார். ஆனால் அவர் காயம் காரணமாக இங்கிலாந்து மற்றும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதன் காரணமாகவே அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

எது எப்படியோ கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்வின் மீண்டும் இந்திய டி20 அணியில் இணைந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமே. 

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

இதுவரை 46 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 52 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 159 போட்டிகளில் 139 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை