நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் - லிட்டன் தாஸ்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரங்களில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இந்த அணியில் நட்சத்திர ஆல் ரவுண்டார் ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர், அதில் சோபிக்க தவறியதன் காரணமாக ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது மோசமான ஃபார்ம் காரணமாகவே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியில் தன்னை சேர்க்கவில்லை என்று லிட்டன் தாஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தேர்வு என் கட்டுப்பாட்டில் இல்லை. இந்த முடிவை தேர்வாளர்கள் தான் எடுத்துள்ளனர். யாரை விளையாட வேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். என் வேலை சிறப்பாக செயல்படுவது. என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் அதைப் பற்றி கொஞ்சம் வருத்தப்பட்டேன் என்று நினைக்கிறேன். இன்றைய ஆட்டத்திற்கு முன்னும் பின்னும் எனக்கு அதே மனநிலைதான் உள்ளது.
ஆனால் அதற்கான நாள் ஏற்கனவே கடந்துவிட்டது. நான் சில சிறப்பான ஆட்டத்தை விளையாடிவுள்ளேன், ஆனால் அது கடந்த காலத்தில்தான். நான் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறேன். நான் தொடர்ந்து கடினமாக உழைப்பேன், அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எனக்கு ஒரு தெளிவான செய்தி கொடுக்கப்பட்டது. தேர்வாளர்களிடமிருந்து ஒருவேளை இல்லாமல் இருக்கலாம், ஆனால் நான் ஏன் அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதைக் கண்டுபிடிப்பது எளிது.
நான் சிறப்பாக செயல்படாததால் தான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். இதில் மறைக்க எதுவும் இல்லை. ரசிகர்கள் என்னை ஆதரிப்பார்கள், ஆனால் நான் நன்றாகச் செயல்படாதபோது, மக்கள் எதிர்மறையாக இருப்பார்கள். அது உண்மையில் என் கவலை அல்ல. நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் லிட்டன் தாஸ் விளையாடிய கடைசி 8 போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), சௌமியா சர்க்கார், தன்ஸித் ஹசன், தாவ்ஹித் ஹ்ரிடோய், முஷ்ஃபிக்கூர் ரஹீம், மஹ்மூதுள்ளா, ஜக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அஹ்மத், முஸ்தஃபிசூர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன் எமன், நசும் அஹ்மத், தன்சிம் ஹசன் ஷாகிப், நஹித் ராணா.