இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.

Advertisement

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியும், பேட்டிங்கில் கடுமயாக திணறி, கடும் முயற்சிக்கு பிறகு கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.

Advertisement

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இரு அணிகளுமே 100 ரன்கள் எடுப்பதற்கு மிக கடுமையாக திணறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளத்தின் தன்மையை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான் கௌதம் கம்பீர், இரண்டாவது போட்டிக்கான ஆடுகளத்தை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய கௌதம் கம்பீர், “ஆடுகளத்தின் தன்மை மிக மிக மோசமானதாக இருந்தது, சர்வதேச போட்டிகளில் இது போன்று நடைபெறுவது ஏற்புடையது அல்ல. ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் டி காக் இந்த ஆடுகளத்தை பற்றி தெரிந்தால் ஐபிஎல் தொடரையே புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது, அந்த அளவிற்கு ஆடுகளம் மிக மோசமானதாக இருந்தது.

யுஸ்வேந்திர சாஹலை சரியாக பயன்படுத்தாதது ஏன் என இப்பொழுதும் எனக்கும் புரியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்த போதிலும், ஹர்திக் பாண்டியா யுஸ்வேந்திர சாஹலை சரியாக பயன்படுத்தாமல் தீபக் ஹூடாவிற்கு 4 ஓவர்கள் கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

Advertisement

இது தவறான முடிவு. அர்ஸ்தீப் சிங், சிவம் மாவி போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் ஆடுகளத்தின் தன்மை சூழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்த போது, யுஸ்வேந்திர சாஹல் போன்ற ஒருவரை சரியாக பயன்படுத்தாது ஏற்புடையது அல்ல” என்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News