ஐபிஎல் 2024 விருதுகள்: வழங்கப்பட்ட விருதுகளும், அதன் பரிசு தொகையும்!

Updated: Mon, May 27 2024 16:37 IST
Image Source: Google

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது. 

அந்தவகையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அதேசமயம் தோல்வியை சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.12.50 கோடி பரிசுத்தொகையும், மூன்றாம் இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 7 கோடியும், எலிமினேட்டர் சுற்றில் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

மேற்கொண்டு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கு ரூ.15 லட்சமும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரருக்கு ரூ. 12 லட்சமும், தொடரின் சிறந்த இளம் வீரருக்கு ரூ. 20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு  நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்த உதவிய மைதானங்களுக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பரிசுத்தொகை அறிவித்துள்ளார்.

அதன் படி இறுதிப்போட்டி நடைபெற்ற சென்னை, கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஐதராபாத், முல்லான்பூர், பெங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, குஜராத் ஆகிய 10 முதன்மை மைதானங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுவதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அத்துடன் விசாகப்பட்டினம், கவுகாத்தி, தர்மசாலா ஆகிய 3 மைதானங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஜெய் ஷா அறிவித்துள்ளார். 

 

ஐபிஎல் 2024 தொடர் விருதுகள்

  • சாம்பியன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ.20 கோடி)
  • இரண்டாம் இடம் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (ரூ.13.5 கோடி)
  • மூன்றாம் இடம் - ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.7 கோடி)
  • நான்காம் இடம் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ரூ.6.5 கோடி)
  • சிறந்த இளம் வீரர் விருது - நிதீஷ் குமார் ரெட்டி (சன்ரைசர்ஸ்)
  • அதிக ரன்கள் அடித்த வீரர் - விராட் கோலி (ஆர்சிபி)
  • அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் - ஹர்ஷல் படேல் (பஞ்சாப் கிங்ஸ்)
  • சிறந்த கேட்சை பிடித்தவர் - ரமந்தீப் சிங் (கேகேஆர்)
  • சிறந்த ஸ்டிரைக் ரேட் வீரர் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)
  • அதிக சிக்ஸ்கர்கள் அடிதத வீரர் - அபிஷேக் சர்மா (சன்ரைசர்ஸ்)
  • அதிக பவுண்டரி அடித்த வீரர் - டிராவிஸ் ஹெட் (சன்ரைசர்ஸ்)
  • அதிக அரைசதம் அடித்த வீரர் - விரா கோலி (6 முறை)
  • சிறந்த மைதானம் - ராஜிவ் கந்தி மைதானம், ஹைதராபாத்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை