குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை தக்கவைக்க முயற்சி செய்யும், அதேசமயம் லக்னோ அணி ஆறுதல் வெற்றியைப் பெற முயற்சிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளதுடன், பிளே ஆஃப் சுற்றுக்kகும் முன்னேறி அசத்தியுள்ளது. அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 9 வெற்றி மற்றும் 3 தோல்விகளைச் சந்தித்து 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்டில் நீடித்து வருகிறது. இதனால் இந்த ஆட்டத்திலும் அந்த அணி வெற்றிபெற்று தங்கள் முதலிடத்தை தக்கவைக்க போராடும்.
அணியின் பேட்டிங்கில் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் இருப்பதன் காரணமாக அது அணிக்கு உதவக்கூடும். மறுபக்கம் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முகமது சிராஜ், காகிசோ ரபாடா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் ரஷித் கான், சாய் கிஷோர் ஆகியோரும் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ககிசோ ரபாடா, சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வியைச் சந்தித்த கையோடு, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் இழந்துள்ளது. இதனால் எஞ்சிய போட்டிகளில் அந்த அணி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்யும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அணியின் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம் ஆகியோர் அணியின் நம்பிக்கையாக உள்ளனர்.
அவர்களுடன் ரிஷப் பந்த், டேவிட் மில்லர், ஆயூஷ் பதோனி ஆகியோரும் சோபிக்கும் பட்சத்தில் அது அணிக்கு கைகொடுக்கும். அதேசமயம், பந்துவீச்சை பொறுத்தவரையில் மிகப்பெரும் பலவீனமாக உள்ளது. ஷர்துல் தாகூர், அவேஷ் கான், ரவி பிஷ்னாய் உள்ளிட்டோர் மட்டுமே அந்த அணியில் பந்துவீச்சை துறையை வழிநடத்துவதால் இப்போட்டியை அந்த அணி எவ்வாறு எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த் (கேப்டன்), நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ரவி பிஷ்னோய், ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, வில்லியம் ஓ'ரூர்க்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 06
- குஜராத் டைட்டன்ஸ் - 04
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 02
Also Read: LIVE Cricket Score
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், நிக்கோலஸ் பூரன்
- பேட்ஸ்மேன்கள் - சாய் சுதர்ஷன் (கேப்டன்), ஷுப்மான் கில் (துணை கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஆயுஷ் பதோனி, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்
- ஆல்-ரவுண்டர்கள் - ஐடன் மார்க்ரம், ஷர்துல் தாக்கூர்
- பந்துவீச்சாளர்கள் - பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.