ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. இத்தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணியை வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியா இந்தாண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றதுடன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அதேசமயம் ஹர்திக் பாண்டியா விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் வகையில் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
- இடம் - நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம், அஹ்மதாபாத்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு சீசன்களாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சீசனிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது. இதில் நடப்பு சீசனுக்கான குஜராத் அணியை ஷுப்மன் கில் வழிநடத்தவுள்ளார். அதுபோக அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி நடப்பு சீசனிலிருந்து விலகியுள்ள அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும், பல நட்சத்திர வீரர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் அணியின் பேட்டிங்கில் ஷுப்மன் கில், டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், மேத்யூ வேட், ராகுல் திவேத்தியா ஆகியோர் தொடர்ச்சியாக தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர், ஷாருக் கான், சாய் சுதர்சன், சாய் கிஷோர் ஆகியோரும் பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்க்கக்கூடியவர்களாக பார்க்கப்படுகின்றன.
அணியின் பந்துவீச்சு துறையை நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வழிநடத்தவுள்ளார். அவருடன் நூர் அஹ்மத், ஜோஷுவா லிட்டில், மொஹித் சர்மா, சாய் கிஷோர், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரும் பந்துவீச்சை வலிமைப்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலோரின் எதிர்பார்ப்புகள் ரஷித் கான் மற்றும் நூர் அஹ்மத் பக்கம் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் குஜராத் டைட்டன்ஸிலிருந்து விலகி மும்பை இந்தியன்ஸில் இணைந்துள்ள ஹர்திக் பாண்டியா நடப்பு சீசனில் அந்த அணியை வழிநடத்தவும் உள்ளார். முன்னதாக வெற்றிகரமான கேப்டன் ரோஹித் சர்மாவை அப்பதவியிலிருந்து நீக்கி ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது மும்பை ரசிகர்களை அதிருப்தியடைய செய்தாலும், இவரது தலைமையின் கீழ் மும்பை அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.
அணியின் பேட்டிங்கில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், திலக் வர்மா, நெஹால் வதேரா, டிம் டேவிட், டெவால்ட் ப்ரீவிஸ் போன்றோர் உள்ளனர். இதில் சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், மற்ற வீரர்கள் தங்களது ஃபார்மில் இருக்கும் பட்சத்தில் நிச்சயம் மும்பை அணியின் வெற்றியை தடுப்பது பெரும் சவாலாக இருக்கும்.
அதேபோல் அணியின் பந்துவீச்சு துறையை ஜஸ்ப்ரித் பும்ரா வழிநடத்துவார். அவருக்கு துணையாக ஜெரால்ட் கோட்ஸி, நுவான் துஷாரா ஆகியோருடன் தற்போது காயம் காரணமாக விலகிய தில்ஷன் மதுஷங்காவிற்கு மாற்றாக தேர்வுசெய்யப்பட்டுள்ள குவேனா மபகாவும் இருப்பது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. இவர்களுடன் ஹர்திக் பாண்டியான், பியூஷ் சாவ்லா, முகமது நபி போன்றோரும் இருப்பதால் மும்பை அணியின் பந்துவீச்சு கூட்டணியும் வலிமை வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்
நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இங்கு களத்தில் நின்று விளையாடும் பேட்டர்கள் பெரிதளவில் ரன்களைக் குவிக்கலாம். மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் எப்போது வேண்டுமானாலும் விளையாட்டில் கம்பேக் கொடுப்பார்கள். மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்களாக உள்லது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 04
- குஜராத் டைட்டன்ஸ் - 02
- மும்பை இந்தியன்ஸ் - 02
உத்தேச லெவன்
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா, சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நூர் அஹ்மத், ஸ்பென்சர் ஜான்சன், மோஹித் சர்மா.
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நேஹால் வதேரா, டிம் டேவிட், பியூஷ் சாவ்லா, முகமது நபி, ஆகாஷ் மத்வால், ஜஸ்பிரித் பும்ரா, நுவான் துஷாரா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - விருத்திமான் சாஹா, இஷான் கிஷன்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் (கேப்டன்), டிம் டேவிட், சாய் சுதர்ஷன்
- ஆல்ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்)
- பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, ரஷித் கான்.
GT vs MI IPL 2024 Dream11 Prediction, Today Match GT vs MI, GT vs MI Dream11 Team, Fantasy Cricket Tips, GT vs MI Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between Gujarat Titans vs Mumbai Indians
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.