ஷார்ட் பந்துகளை விளையாட கடினமாக இருந்தது - ஷுப்மன் கில்!

Updated: Mon, Mar 25 2024 10:36 IST
ஷார்ட் பந்துகளை விளையாட கடினமாக இருந்தது - ஷுப்மன் கில்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 168 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி குஜராத் அனியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக டெவால்ட் ப்ரீவிஸ் 46 ரன்களையும், ரோஹித் சர்மா 43 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் மோஹித் சர்மா, ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றனர். 

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில், “இப்போட்டியில் எங்கள் அணி வீரர்கள் செயல்படுகள் சிறப்பாக இருந்தது.  எங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் பந்துவீசிய விதம் நாங்கள் எப்போதும் விளையாட்டில் இருப்பதை உறுதி செய்தது. அதிலும் அவர்கள் எந்த சூழ்நிலையிலும் பதட்டப்படாமல் செயல்பட்டனர். இன்றைய போட்டியில் சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இந்த போட்டியில் நாங்கள் எதிரணிக்கு அழுத்தத்தை உருவாக்கி அவர்கள் தவறு செய்யும் வரை காத்திருக்க விரும்பினோம். மேலும் இங்கு கூடியிருந்த ரசிகர்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு அலாதியானது. நடப்பு ஐபிஎல் தொடரில் போட்டி எப்போது நடைபெற்றாலும் அவர்களது ஆதரவு எங்களுக்கும் என நம்புகிறேன். மேலும் இப்போட்டியில் நாங்கள் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். ஏனெனில் இறுதியில் விக்கெட் சற்று மெதுவாக இருந்ததால் ஷார்ட் பந்துகளை அடிப்பது கடினமாக மாறியது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை