ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, May 06 2022 11:30 IST
Image Source: Google

15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 50 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இந்நிலையில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும்  51ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
  • இடம் - பிரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள குஜராத் அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அந்த வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிடும்.

பேட்டிங்கில் ஹர்திக் பாண்டிட்யா (309 ரன்கள்), டேவிட் மில்லர் (287 ரன்கள்), சுப்மான் கில் (269 ரன்கள்) ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (15 விக்கெட்), லோக்கி ஃபெர்குசன் (11 விக்கெட்), ரஷித் கான் ஆகியோர் அசத்தி  வருகிறார்கள்.

மறுபுறம், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் படுமோசமாக சொதப்பி வருகிறது. தொடர்ந்து 8 தோல்விகளை பெற்றுவிட்ட பின்னர் தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை அணி மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளை மட்டும் தான் பெற்றுள்ளது. 

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற வேண்டும். அந்த வகையில் மும்பை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டது. இருப்பினும், அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆறுதல் வெற்றிகளை பெற்று, அடுத்த சீசனுக்காக வலுவான அணியை தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

பேட்டிங்கில் திலக் வர்மா  (307 ரன்கள்),  சூர்யகுமார் யாதவ் (290 ரன்கள்), இஷான் கிஷன் (225 ரன்கள்) நம்பிக்கையளிக்கின்றனர். ரோகித் சர்மா, பொல்லார்ட் உள்ளிட்டோர் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். அந்த அணியில் பவுலிங் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது. 

இன்றைய ஆட்டத்திலாவது பந்துவீச்சு புத்துயிர் பெறுமா எனப் பார்க்கலாம். மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக இந்த  ஐபிஎல் தொடரில் இனி வரும் போட்டிகளில் இருந்து  விலகியுள்ளார். அவருக்கு பதிலாக  தென் அப்பரிக்கவை சேர்ந்த  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார்.

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா,சாய் சுதர்சன்,ஹர்திக் பாண்டியா (கே),டேவிட் மில்லர்,ராகுல் திவேத்தியா,ரஷித் கான்,அல்ஸாரி ஜோசப், லோக்கி ஃபெர்குசன்,முகமது ஷமி,பிரதீப் சங்வான்/யாஷ் தயாள்.

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பொல்லார்ட், டிம் டேவிட்,டேனியல் சாம்ஸ், ஹிருத்திக் ஷோக்கீன்,ஜஸ்பிரித் பும்ரா,குமார் கார்த்திகேயா, ரிலே மெரிடித்/டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர்கள் - விருத்திமான் சாஹா, இஷான் கிஷான்
  • பேட்ஸ்மேன்கள் - சூர்யகுமார் யாதவ், டேவிட் மில்லர், திலக் வர்மா, ஷுப்மான் கில்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, டேனியல் சாம்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரஷித் கான் 
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை