ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Sat, Apr 30 2022 11:15 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று மாலை 3:30 மணிக்கு நடைபெறும் 43வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா  தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - குஜராத் டைட்டன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - ப்ரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 1 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. கேப்டன் ஹர்திக் பாண்டியா 305 ரன் அடித்துள்ளார். டேவிட் மில்லர், சுப்மான் கில், அபினவ் மனோகர் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் முகமது ஷமி, பெர்குசன், ரஷீத் கான், யாஷ் தயாள் ஃபார்மில் உள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  இதுவரை 9 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 4 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், பெங்களூரு அணிக்கு இந்த ஆட்டம் முக்கியமானது. ஏனென்றால் இந்த ஒரு வெற்றியின் மூலம் அந்த அணி 4வது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். ப்ளே ஆஃப் வாய்ப்பும் பிரகாசமாகும்.

கடைசியாக ஆடிய இரு லீக் ஆட்டத்திலும் அடைந்த படுதோல்வியால் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ள பெங்களூரு அணி, அதில் இருந்து மீண்டு வரும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்கக்கூடும். அதேநேரம் வெற்றி நடையை தொடரும் முனைப்பில் குஜராத் அணி உள்ளதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

உத்தேச லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மான் கில், விருத்திமான் சாஹா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, அபினவ் மனோகர், ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், லாக்கி பெர்குசன்,  முகமது ஷமி, யாஷ் தயாள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, சுயாஷ் பிரபுதேசாய் / மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்க, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், விருத்திமான் சாஹா
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், டேவிட் மில்லர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஷபாஸ் அகமது, ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - வனிந்து ஹசரங்கா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ் ஹேசில்வுட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை