ஐஎல்டி20: டெஸர்ட் வைப்பர்ஸை வீழ்த்தியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!

Updated: Sat, Feb 04 2023 20:40 IST
Image Source: Google

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐஎல்டி20 லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெஸர்ட் வைப்பர்ஸ் அணி பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் டாம் பாண்டன் 20, ஜேம்ஸ் வின்ஸ் 39, கிறிஸ் லின் 12 ரன்களில் ஆட்டமிழக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் 54 ரன்களைக் குவித்தார்.

இதையடுத்து இலக்கை துரத்திய டெஸர்ட் வைப்பர்ஸ் அணியில் ரோஹன் முஸ்தஃபா 28, அலெக்ஸ் ஹேல்ஸ் 26 என சிறப்பான தொடக்கத்தை கொடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் காலின் முன்ரோ 2, சாம் பில்லிங்ஸ் 22, ரூதர்ஃபோர்ட் 2 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய டாம் கரண் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 42 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை