ஜேசன் ராயின் காயம் பெரும் இழப்பாக இருக்கும் - ஈயான் மோர்கன்!

Updated: Sun, Nov 07 2021 12:12 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. இதில் குரூப் 1இல் இடம்பிடித்துள்ளா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும், குரூப் 2இல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

இந்நிலையில் நேற்றை தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் காயம் காரணமாக பாதியிலேயே களத்தைவிட்டு வெளியேறினார். மேலும் அவரது கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இதனால் டி20 உலகக்கோப்பை அரையிறுதிச்சுற்றுகளில் அவரால் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் ஜேசன் ராயின் காயம் தங்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “ஜேசன் ராயின் காயம் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஆனாலும் அவர் குணமடைந்துவிடுவார் என்று நம்பிக்கையுடன் உள்ளோம். சீசனில் இறுதியில் வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவது எங்களுக்கு பெரும் அழுத்தத்தை உண்டாக்குகிறது. 

Also Read: T20 World Cup 2021

ஏனெனில் காயம் மற்றும் வேறு சில காரணங்களால் எங்கள் அணியின் பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், சாம் கரன், பென் ஃபோக்ஸ் ஆகியோருடன் தற்போது டைமல் மில்ஸ், ஜேசன் ராய் ஆகியோரும் இணைந்திருப்பது எங்களுக்கு வருத்தத்தை அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை