தொடர் வெற்றிகளை பெறுவது எங்களுக்கு முக்கியமானது - சரித் அசலங்கா!
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுல் பல்லகலேவில் நடைபெற்றது. மழை காரணமாக 44 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சகாம ரூதர்ஃபோர்டு 80 ரன்களையும், குடகேஷ் மோட்டி 50 ரன்களையும் சேர்த்தனர்.
இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா ஆகியோரும் தலா 38 ரன்கள் எடுத்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா இப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அரைசதம் கடந்தும் இலங்கை அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்கா 62 ரன்களைச் சேர்க்க, இலங்கை அணி 38.2 ஓவர்களில் இலக்கை எட்டிடதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய அசலங்கா, “நாங்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்த தொடர்களை வென்று வருவது எங்களுக்கு மிகவும் நல்ல விஷயம். எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களும் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் இதுபோலவே தொடர்ச்சியாக சிறப்பான அடடத்தை வெளிப்படுத்தவர்கள் என்று நம்புகிறேன்.
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் முதல் ஓவரை வீச தீக்ஷனாவை அழைததற்கான முக்கிய காரணம் வானிலை மற்றும் ஓவர்கள் குறைக்கப்பட்டது தான். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர், அதனால் நான் அவருடன் ஆட்டத்தை தொடங்க விரும்பினேன். அதேபோல் நான் ஐந்தாவது இடத்தில் களமிறங்கி நான் எனது பேட்டிங்கை வெளிப்படுத்த விரும்புகிறேன். அதனால் இனிவரும் போட்டிகளிலும் நான் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.