இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி இன்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையெடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள், உலக கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
இந்நிலையில் தோனியோடு சேர்த்து இந்திய அணியின் இளம் வீரர் தேவ்தவ் படிக்கல் இன்று தனது 21வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 13ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் மூலம் தனது கேரியரை தொடங்கிய தேவ்தத் படிக்கல் தான் பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே சிறப்பான ஆட்டத்தின் மூலம் எமர்ஜிங் பிளேயேர் விருதினையும் தட்டி சென்றிருந்தார்.
மேலும் நடப்பு ஐபிஎல் சீசனில் சதமடித்தும் அனைவரது கவணத்தையும் ஈர்த்துள்ளார். இதுவரை 21 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றுள்ள படிக்கல் 668 ரன்களை குவித்துள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கும் அவர் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கிறது.
இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடும் தேவ்தத் படிக்கல்லிற்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அது மட்டுமின்றி பி.சி.சி.ஐ யும் இலங்கை தொடருக்காக அவர் வலைப் பயிற்சியில் தயாராகி வரும் ஒரு காணொளியை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.