ஐபிஎல் 2022 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பினிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வருகிறார். 

Advertisement

இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 274 ரன்களுடன் 68.50 சராசரி வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 200 இல் விளையாடுகிறார். 

Advertisement

இந்நிலையில், நான் தேர்வுக்குழு தலைவராக  இருந்தால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக்கு டி20 அணியில் வாய்ப்புண்டு என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார். லெக் சைடு அடிக்கும் ஷாட்கள் மிகவும் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் ஆட்டத்தை புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல் ஆடுகிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆட்டத்தை முடித்து கொடுக்கிறார். நானாக இருந்தால் அவரைத்தான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இந்த டி20 உலக கோப்பைக்குத் தேர்வு செய்வேன் " என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News