யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை - சர்ச்சை காணொளி குறித்து ஹர்பஜன் சிங் விளக்கம்!

Updated: Mon, Jul 15 2024 23:21 IST
Image Source: Google

முன்னாள் வீரர்கள் பங்கேற்ற லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் முன்னேறின. பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றதுடன், கோப்பையையும் வென்று சாதித்தது. 

இதனையடுத்து இந்தியா சாம்பியன்ஸ் அணியில் அங்கம் வகித்த முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன்சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வரையில் அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடனமாடினர். மேலும் அதில் அவர்கள் மற்றுத்திறனாளிகளைப் போன்று நடந்து வந்த காணொளியானது இணையத்தில் வைரலானதுடன், மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதத்தில் இருந்ததாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

மேற்கொண்டு இந்திய வீரர்கள் நடனமாடும் காணொளிக்கு மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய முகமையும் இது முற்றிலும் அவமானகரமானது என தங்களுடைய கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யும் விதமாக காணொளி வெளியிட்டதாக முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா ஆகியோர் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தங்கள் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலும், அந்த காணொளிக்கான நோக்கத்தை தெளிவுப்படுத்தும் வகையில், மேலும் அக்காணொளியால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கும் வகையிலும் ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், “இங்கிலாந்தில் நடந்த லெஜண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரை வென்ற பிறகு, சமூக ஊடகங்களில் தௌபா தௌபாவின் சமீபத்திய காணொளி பற்றி புகார் செய்யும் எங்கள் மக்களுக்கு அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

யாருடைய மனதையும் புண்படுத்த நாங்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு தனிமனிதனையும் சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம். இந்த காணொளியானது தொடர்ந்து நாங்கள் 15 நாள்கள் விளையாடியதால் எங்கள் உடல் வலியை பிரதிபலிக்கும் வகையில் மட்டுமே எடுக்கப்பட்டது. நாங்கள் யாரையும் அவமதிக்கவோ அல்லது புண்படுத்தவோ முயற்சிக்கவில்லை. இன்னும் மக்கள் நாங்கள் ஏதாவது தவறு செய்ததாக நினைத்தால், அனைவரும் எங்களை மன்னிக்கவும். தயவுசெய்து இதை இங்கே நிறுத்திவிட்டு அடுத்த நிகழ்வுகளை நோக்கி முன்னேறுவோம். மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்.” என்று பதிவுசெய்துள்ளார். ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ள இந்த பதிவுவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை