AU-W vs NZ-WMatch 2, Cricket Tips: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது இன்று (செப்டம்பர் 30) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் அலிசா ஹீலி தலைமையிலன ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து, சோஃபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்கள், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் தொடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

AU-W vs NZ-W: Match Details

மோதும் அணிகள் - ஆஸ்திரேலிய மகளிர் vs நியூசிலாந்து மகளிர்
இடம் - ஹோல்கர் கிரிக்கெட் மைதானம், இந்தூர்
நேரம்- அக்டோபர் 01, மதியம் 8.0 மணி (இந்திய நேரப்படி)

AU-W vs NZ-W: Live Streaming Details

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

AU-W vs NZ-W: Head-to-Head in T20Is

  • Total Matches: 135
  • Australia Women: 102
  • New Zealand Women: 31
  • No Result: 2

AU-W vs NZ-W: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 7 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 2 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 331 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 418 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AU-W vs NZ-W: Possible XIs

Advertisement

Australia Women: ஜார்ஜியா வால், அலிசா ஹீலி (கேப்டன்), எல்லிஸ் பெர்ரி, ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, ஆஷ்லே கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், அலனா கிங், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், மேகன் ஸ்கட்

New Zealand Women: சோஃபி டிவைன் (கேப்டன்), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், சுசி பேட்ஸ், ஜார்ஜியா பிளிம்மர், அமெலியா கெர், இசபெல்லா கேஸ், ஜெஸ் கெர், ரோஸ்மேரி மெய்ர், ப்ரீ இல்லிங், லியா தஹுஹு

AU-W vs NZ-W: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

இந்தியாவுக்கு எதிரான சமீபத்திய தொடரில் ஆஸ்திரேலியாவுக்காக பெத் மூனி அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாக இருந்தார். கடைசி ஒருநாள் போட்டியிலும் அவர் விரைவான சதம் அடித்தார்.

Probable Best Bowler

ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இடத்தில் உள்ள பந்து வீச்சாளர் ஆஷ்லே கார்ட்னர். அவர் தொடர்ந்து போட்டியை வெல்லும் பங்களிப்பை வழங்கி வருகிறார், மேலும் இந்த மைதானத்தில் அவரது பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

Also Read: LIVE Cricket Score
Advertisement

AU-W vs NZ-W Prediction Match 1, ICC Womens World Cup 2025, Today Match AU-W vs NZ-W, AU-W vs NZ-W Prediction, AU-W vs NZ-W Predicted XIs, Injury Update of the match between Australia Women vs New Zealand Women

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News