தோனி கண்ணீர் விட்டு முதல் முறையாக பார்த்தேன் - ஹர்பஜன் சிங்!

Updated: Tue, May 23 2023 20:45 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருந்து வரும் சிஎஸ்கே இதுவரை விளையாடிய 14 சீசன்களில் 12 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதில் ஒன்பது முறை இறுதிப் போட்டிக்கும் சென்றிருக்கிறது. இந்த சீசனில் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி தகுதி பெற்றுவிட்டது. முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் பத்தாவது முறையாக பைனலுக்கு செல்லும். வேறு எந்த அணியும் இவ்வளவு வெற்றிகரமாக இருந்ததில்லை.

சிஎஸ்கே அணியுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகத்தில் ஒருவர் மேட்ச் பிக்சிங் செய்ததற்காக நடுவில் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருந்தனர். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்து அந்த வருடமே ஐபிஎல் கோப்பையையும் வென்றனர். இது சிஎஸ்கே அணியின் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது அப்போது சிஎஸ்கே அணியில் பயணித்த ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் தோனியுடன் நடந்த சில உணர்வுபூர்வமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், “2018ல் இரவு உணவு அருந்தி கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு ‘அழுக வேண்டாம்.. அழுக வேண்டாம்’ என்று சொல்வது போல குரல் கேட்டது. உடனடியாக திரும்பிப் பார்த்தால் தோனி ஒரு பக்கம் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். இரண்டு வருடங்களுக்கு பிறகு சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்கு வந்திருக்கிறது. இதைநினைத்து அவர் கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார். இதற்கு முன்னர் தோனி பற்றி அப்படி கேள்விப்பட்டதும் இல்லை. 

பார்த்ததும் இல்லை என்பதால் எங்களுக்கும் மிகவும் உணர்வுபூர்வமாகவும் கிட்டத்தட்ட கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. அப்போது என்னுடன் இம்ரான் தாஹிர் இருந்தார். அவருக்கும் எனக்கு மட்டுமே இது நன்றாகத் தெரியும். அணியில் வேறு எவருக்கும் இது தெரியாது. இன்று பகிர்ந்து கொள்வதற்கு காரணம் தோனிக்கு இது தான். கடைசி ஐபிஎல் என்று கூறப்படுகிறது. ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை என்றாலும், இதுபோன்ற சிறுசிறு நிகழ்வுகள் மற்றும் சிஎஸ்கே அணி மீது அவர் வைத்திருக்கும் அன்பு எத்தகையது என்பதை வெளிப்படுத்துவதற்காக கூறுகிறேன்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை