இன்ஸாமாம் உல் ஹக்கின் சர்ச்சை கருத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி!

Updated: Wed, Nov 15 2023 14:37 IST
இன்ஸாமாம் உல் ஹக்கின் சர்ச்சை கருத்துக்கு ஹர்பஜன் சிங் பதிலடி! (Image Source: Google)

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மற்ற நாடுகளை சேர்ந்த வீரர்கள் எல்லாம் 90 சதவீதம் இந்தியாவைப் பற்றி தான் அதிகமாக பேசி வருகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இந்தியா என்ன செய்ய வேண்டும்? இந்தியாவுக்கு என்ன பிரச்சனை? இந்தியா கடந்த காலங்களில் என்ன செய்தது என்பது குறித்து தான் பேசி வருகிறார்கள்.

இதில் ஒரு பத்து சதவீதம் தங்கள் நாட்டு வீரர்கள் பற்றி பேசினால் கூட தங்களது அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து இருந்திருக்கும். இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸாமாம் உல் ஹக் அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதில், இந்திய வீரர் ஹர்பஜன் சிங், எங்களது அணியின் மத குருவிடம் நன்றாக பேசுவார் என்றும் எங்களுக்கு வழங்கப்படும் மதச் சொற்பொழிவில் கூட அவர் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதாகவும் இன்ஸாமாம் உல் குறிப்பிட்டுள்ளார். ஹர்பஜன் சிங் தன்னை இஸ்லாமியனாக மாற்றிக்கொள்ள மிக அருகில் வரை வந்தார் என்றும் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஹரபஜன்சிங், “இன்ஸாமாம் எதன் அடிப்படையில் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை? நான் இந்தியனாக இருக்க பெருமைப்படுகிறேன். நான் சீக்கியராக வாழ பெருமைப்படுகிறேன். நான் மதம் மாற நினைக்கவில்லை. இந்த முட்டாள்கள் முட்டாள்தனமாக தான் பேசுவார்கள்” என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 

 

இந்திய வீரர் ஒருவர் இஸ்லாமியனாக மாற இருந்தார் என்று இன்ஸாமாம் பேசியிருப்பது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோன்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்து பேசியதும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை