ஆஸ்கர் ஆஃப்கானின் ஓய்வை ஏற்றுக்கொள்வது கடினம் தான் - ரஷித் கான்!
ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்தவர் ஆஸ்கர் ஆஃப்கான். இவர் ஆஃப்கானிஸ்தான் அணிக்காக பல ஆண்டுகளாக விளையாடி வந்த நிலையில், இன்றுடன் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நமீபியா அணிகள் விளையாடின. இதில் ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அசத்தியது.
இப்போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய ஆஸ்கார் ஆஃப்கான் 31 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார். தனது கடைசி போட்டியிலும் வெற்றியோடு அவர் கிரிக்கெட் வாழ்விற்கு விடைகொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்கர் ஆஃப்கானின் ஓய்வு முடிவை ஏற்று கொள்ள கடினமாக உள்ளது என அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இதுகுறித்து பதிவிட்டுள்ள ரஷித் கான், “ஆஸ்கர் ஆஃப்கானின் ஓய்வை முடிவை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். அவர் எனக்கும், எங்கள் அணி இளைஞர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருந்துள்ளார். ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட்டிற்கு அவர் செய்த முன்மாதிரியான சேவைக்காக அவருக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. அவரது சாதனைகள் மற்றும் தியாகங்கள் நிகரற்றவை” என்று பதிவிட்டுள்ளார்.