பாட்டியுடன் ஸ்ரீவள்ளி ஸ்டெப்; வைரலாகும் ஹர்திக்கின் காணொளி!

Updated: Wed, Jan 26 2022 18:07 IST
Hardik Pandya joins Pushpa trend along with his grandmother, leaves fans elated on Instagram (Image Source: Google)

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியருந்த புஷ்பா திரைப்படம், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, புஷ்பா படத்தின் பாடல்கள் மற்றும் அதில் இடம்பெற்றுள்ள வசனங்கள், மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், என எதை திறந்தாலும், புஷ்பா படம் தொடர்பான காணொளிகள் அதிகமாக தென்படுகிறது. அந்த அளவுக்கு பிரபலங்கள் வரை, புஷ்பா பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒரு வழி பண்ணியுள்ளது. இந்திய அணி வீரர்களான சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர், அல்லு அர்ஜுன் நடனம் மற்றும் வசனங்கள் பேசும் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.

அதே போல, ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் கூட, ஸ்ரீவள்ளி பாடலுக்கு, காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், தன்னுடைய மகள்களை வைத்து, 'சாமி சாமி' என்ற புஷ்பா படத்தின் பாடலுக்கும் நடனமாட வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வார்னருக்கு பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ, புஷ்பா பாடலுக்கு ஆடி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், நேற்று நடைபெற்ற பங்களதேஷ் பிரீமியர் லீக் போட்டியில், விக்கெட் எடுத்த உடன், மைதானத்தில் கூட புஷ்பா ஸ்டெப்பை ஆடிக் காட்டினார்.

சர்வதேச லெவலுக்கு 'ஸ்ரீவள்ளி' ஹிட்டடித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் ஒரு இந்திய வீரர், சற்று வித்தியாசமாக இந்த பாடலுக்கு நடனமாடி காணொளியை வெளியிட்டுள்ளார்.

 

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், அகமதாபாத் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். கடந்த சில தொடர்களில், காயம் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்து வரும் நிலையில், தன்னுடைய பாட்டியுடன் இணைந்து, 'ஸ்ரீவள்ளி' பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

மற்ற கிரிக்கெட் வீர்ரகளின் காணொளியைப் போல, தற்போது இந்த காணொளியும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை