டி20 உலகக்கோப்பை: துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம்?

Updated: Thu, Aug 04 2022 19:03 IST
Image Source: Google

நடப்பாண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் ஐசிசியின் ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து என அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

மேலும் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளும் டி20 கிரிக்கெட்டின் மீது அதிகபடினா கவனத்தை செலுத்தி, அடுத்தடுத்து டி20 தொடர்களை நடத்திவருகின்றன. 

அந்தவகையில் பிசிசிஐயும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் என டி20 தொடர்களை நடத்தியது. இந்நிலையில் தற்போது உலகக்கோப்பை தொடருக்கு ஒத்திகைப் பார்க்கும் வகையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடனான டி20 தொடரின் அட்டவணையை நேற்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்க அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. 

இந்நிலையில் இத்தொடர்கள் உள்பட டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது காயம் காரணமாக சரிவர விளையாடமல் இருந்த ஹர்திக் பாண்டியா, தற்போது காயத்திலிருந்து மீண்டதுடன், பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் தனது முத்திரையைப் படைத்து வருகிறார்.

மேலும் அணியின் துணைக்கேப்டன் கேஎல் ராகுலும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், இனி ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்படுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை