இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் எம்எஸ் தோனியின் பக்கங்கள், மிக முக்கியமானவை. இந்திய அணியை வழிநடத்தியதிலும், தன் பங்களிப்பை செலுத்தியதிலும் மகேந்திர சிங் தோனி, அன்றும், இன்றும், என்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். வயதிற்கும் திறமைக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்த தோனி, இன்றும் ஒரு அணியை வழிநடத்தும் கேப்டனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். தொடக்கம் முதல் கடைசி வரை எந்த விமர்சனமும் இல்லாமல், ‘கூல் கேப்டனாக’ ஓய்வு பெற்ற எம்எஸ் தேனி, இன்றும் அதே உடல்திறனோடு கிரிக்கெட் விளையாட்டை எதிர்கொள்கிறார்.

Advertisement

தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், அவரின் அன்பான வழிநடத்தலால், ஜூனியர் விளையாட்டு வீரர்கள் பலருக்கும் அவர் மீது அலாதி அன்பு. குறிப்பாக சுரேஷ் ரெய்னா, ரவீந்தர் ஜடேஜா, ஹர்திக் பாண்டியா என தோனியின் நிழலாய் இருந்தவர்கள் பலர்.

Advertisement

அவர் ஓய்வு பெற்றாலும், தோனியை அவர்கள் அவ்வப்போது சந்திப்பதை தவிர்த்தது இல்லை. ஆசானாக, அண்ணனாக, ஆலோசகராக அவர்களுடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் தோனி. அந்த வகையில் சில தினங்களுக்கு முன், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம் பெற்ற ஹர்திக் பாண்டியா, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி வந்து, தோனியை சந்தித்துள்ளார்.

நீண்ட நேரம் அவரது வீட்டில் நடந்த சந்திப்பில், நிறைய ஆலோசனைகளை அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தோனி ஒரு பைக் ப்ரியர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரிடம் நிறைய பைக் கலெக்‌ஷன் இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தான் சோலே படத்தில் அமிதாப் பயன்படுத்தும் இருவர் பயணிக்கும் ‘லிங் டைப்’ ஸ்கூட்டரில், தோனியும் பாண்ட்யாவும் ஒன்றாக அமர்ந்து போட்டோ எடுத்துள்ளனர்.

‘விரைவில் சோலே-2’ என்ற கேப்ஷனை தட்டிவிட்ட ஹர்திக்பாண்டுயாவின் இன்ஸ்டாகிராம் பதிவு தான், தற்போது வைரலாகி வருகிறது. சந்திப்பை நினைவூட்டும் கலகலப்பு பதிவாகவே இது இருக்க வாய்ப்பு. இருந்தாலும், கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் தோன்றுவது புதிதில்லை என்பதால், இதை உண்மையென்றும் பலர் நம்பி வருகின்றனர். சோலே திரைப்படம் அமிதாப்பச்சன் வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News