IND vs SL: இந்திய ஒருநாள் & டி20 அணிகள் அறிவிப்பு; சஞ்சு சாம்சனுக்கு இடம், ஷிகர் தவான் நீக்கம்!

Updated: Tue, Dec 27 2022 22:55 IST
Hardik Pandya to lead India in Sri Lanka T20Is, Rohit Sharma returns as captain in ODIs (Image Source: Google)

2022ஆம் ஆண்டை வங்கதேசத்துடனான டெஸ்ட் வெற்றியுடன் முடித்துக்கொண்ட இந்திய அணி 2023ஆம் ஆண்டில் இலங்கை அணியுடனான தொடர்களுடன் தொடங்கவுள்ளது. இந்தியாவில்  இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இந்த தொடர் வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கான டி20 தொடரில் ரோஹித் சர்மா,விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா, கேஎல் ராகுல், தீபக் சஹார் ஆகியோருக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்ப்பட்டுள்ளது. 

சமீப காலமாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் படு மோசமாக சொதப்பி வரும் பந்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில், டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கும், ஒருநாள் தொடரில் இஷான் கிஷானும் வாய்ப்பை பெற்றுள்ளனர். 

மேலும் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணைக்கேப்டனாக சூர்யகுமார் யாதவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஷிவம் மாவி, முகேஷ் குமார் ஆகியோர் அறிமுக வீரர்களாக டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த டி20 அணியில் ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, ருதுராக் கெய்க்வாட் ஆகியோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடருக்கான ஒருநாள் அணியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் அணிக்கு தேர்வாகியுள்ளனர். அதேசமயம் ஒருநாள் அணியிலிருந்து ஷிகர் தவான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் , இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை