ஸ்மிருதி மந்தனாவின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ஹர்மன்ப்ரீத் கவுர்!

Updated: Sat, Jul 19 2025 13:17 IST
Image Source: Google

Harmanpreet Kaur Record: இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஸ்மிருதி மந்தனாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். 

இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகித்து வருகிறது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் ஏற்கெனவே இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகாத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் இங்கிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில், இப்போட்டியின் மூலம் இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சிக்சர்களை அடித்தால், சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது 55 சிக்சர்களை நிறைவு செய்வார். இதன் மூலம், இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறவுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர்களை அடித்த பெண் வீராங்கனை

  • ஸ்மிருதி மந்தனா - 103 போட்டிகளில் 54 சிக்சர்கள்
  • ஹர்மன்ப்ரீத் கவுர் - 147 போட்டிகளில் 53 சிக்சர்கள்
  • ரிச்சா கோஷ் - 38 போட்டிகளில் 21 சிக்சர்கள்

இது தவிர, லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுர் 40 ரன்கள் எடுத்தால், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக 4000 ரன்கள் எடுத்த மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையையும் பெறுவார். இதுவரை, இந்திய அணியின் முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் (232 போட்டிகளில் 7805 ரன்கள்) மற்றும் துணைக்கேப்டன் ஸ்மிருதி மந்தனா (103 போட்டிகளில் 4501 ரன்கள்) மட்டுமே இந்தியாவுக்காக இந்த சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: LIVE Cricket Score

இந்திய மகளிர் ஒருநாள் அணி: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ்(w), அமன்ஜோத் கவுர், ஸ்னே ராணா, ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், ராதா யாதவ், அருந்ததி ரெட்டி, தேஜல் ஹசாப்னிஸ், யாஸ்திகா பாட்டியா, சயாலி சத்கரே

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை