இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது, கரோன பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என ஐசிசி அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது அனைத்து அணிகளும் இந்த டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான அணியை தேர்வு செய்து வருகின்றன.

Advertisement

மேலும் 2007 ஆம் ஆண்டு முதலாவது டி20 உலக கோப்பை தொடரை வென்ற இந்திய அணி, அதன் பிறகு ஒரு முறை கூட டி20 கோப்பையை கைப்பற்றவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 முறை உலகக்கோப்பையை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கும் நிலையில் இம்முறை உலகக் கோப்பையை கைப்பற்றி இரண்டாவது முறையாக டி20 கோப்பையை வென்ற பெருமையை பெற இந்திய அணி கடுமையாக முயற்சிக்கும் என்று தெரிகிறது.

Advertisement

இந்நிலையில் இந்த டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் தற்போது இந்திய அணியில் பல சிறப்பான வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருவதால் இந்த தொடருக்கான அணியில் தேர்வு எவ்வாறு அமையப் போகிறது என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார். 

அவரது அதில் துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் / இஷான் கிஷன் ரிஷப் பண்ட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். ஆல்ரவுண்டராக ஹார்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த டி20 உலகக்கோப்பை இந்திய அணி

Advertisement

ரோஹித் சர்மா,கே.எல் ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர்,இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா,ரவீந்திர ஜடேஜா, தீபக் சாகர், பும்ரா, முகமது ஷமி, நடராஜன், வருண் சக்ரவர்த்தி, சாஹல், வாஷிங்க்டன் சுந்தர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News