ரசிகருக்கு பதிலடி கொடுத்த ஹர்ஷ போக்லே!

Updated: Wed, Jun 21 2023 20:01 IST
Image Source: Google

சமீபத்தில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இரண்டாவது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது . இந்தப் போட்டி தொடரின் தோல்விக்கு பிறகு இந்திய அணி மற்றும் அதன் வீரர்கள் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர் . அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமை மற்றும் வீரர்களின் பேட்டிங் பற்றி முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் வைத்து வருகின்றனர் .

மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் இந்திய அணிக்கு எதிரான விமர்சனங்களும் கண்டனங்களும் அதிகரித்து வருகின்றன . நேற்று நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான அஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது .

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து ஆட்டம் பரபரப்பாகவே நடைபெற்றது . முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரண்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து டிக்ளர் செய்ய ஆஸ்திரேலியா 386 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . இதனைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 280 ரன்கள் வெற்றிலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 107 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது .

ஐந்தாம் நாள் ஆட்டத்தின் முதல் பகுதி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா எட்டு விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெற்றது . பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை பெற்றுள்ளது . இந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை பாராட்டி உள்ள ரசிகர்கள் இந்திய அணியை விமர்சித்து வருகின்றனர் . இது தொடர்பாக ட்விட்டரில் இந்திய அணியை விமர்சனம் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பிரபல வர்ணனையாளரான ஹர்ஷா பொக்லே .

நேற்றைய போட்டியை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு ரசிகர் “சரிசமமான போட்டியாளர்கள் என ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை குறிப்பிட்டிருக்கிறார்”, மேலும் அந்தப் பதிவில் இந்திய அணியை விமர்சித்து இருக்கும் அவர் இந்திய அணி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகளை இடுவதற்கும் ஸ்டோரி வைப்பதற்கும் தான் சரியாக வரும் என்று காட்டமாக விமர்சித்துள்ளார் .

இந்நிலையில் அந்த ரசிகரின் பதிவை பகிர்ந்திருக்கும் ஹர்ஷா போக்லே, “இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது . ஒரு நல்ல அணியால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் ” என்று தன்னுடைய பதிவில் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை