ஸ்ரேயஸ் ஐயருக்கு அட்வைஸ் வழங்கிய முன்னா தேர்வுக்குழு அதிகாரி!

Updated: Fri, Jul 08 2022 13:42 IST
Image Source: Google

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்திய அணியின் டாப் ஆர்டரில் பல வீரர்கள் ஏமாற்றிய போதும், ஸ்ரேயாஸ் ஐயர் தான் அதிகப்படியாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு, பவுன்சர் பந்து மிகப்பெரிய பலவீனம் என்பது வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த மெக்கல்லம் தான் இங்கிலாந்து அணி பயிற்சியாளர். இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தொடர்ந்து பவுன்சர் வீசும்படி மெக்கல்லம் சிக்னல் கொடுக்க, அது அப்படியே வெற்றிகரமாக அமைந்தது.

இங்கிலாந்து பவுலர்கள் வீசிய ஷார்ட் பந்துகளில் சிறிது நேரம் தப்பித்த ஸ்ரேயாஸ் ஐயர், ஒரு கட்டத்தில் மாட்டிக்கொண்டார். 19 பந்துகளில் 26 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். இதனால் இனி ஷார்ட் பால் பிரச்சினையை சரி செய்யாவிட்டால் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்பு கிடைக்காது என வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரேயாஸுக்கு முன்னாள் பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரி ஜட்டின் பரஞ்பே, அட்வைஸ் கூறியுள்ளார். அதில், “ஸ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங் திறமை குறித்து எனக்கு சந்தேகமே இல்லை. அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய ஆர்வத்துடன் உள்ளார். ஆனால் அவர் சொதப்புவதெல்லாம் ஒரு பாடம் கற்றல் தான் நான் கூறுவேன்.

அவர் அவுட்டான அந்த ஒரே ஒரு பந்தை மட்டும் தான் தவறான ஷாட் அடித்தார். மற்றபடி சுமார் 30 நிமிடங்களுக்கு சிறப்பாக களத்தில் விளையாடி வந்த அவர், நல்ல ஸ்கோரை அடிக்க வேண்டும் என நினைத்தார். எனினும் அவுட்டாகிவிட்டார். எனவே ஷார்ட் பந்துகளை தேர்வு செய்வதை அனுபவத்தால் தான் கற்றுக்கொள்ள முடியும்.

ராகுல் டிராவிட்டுடன் நீங்கள் தேநீர் அருந்தி ஆலோசனை நடத்தினால் அது உங்களுக்கு பெரிய பாடத்தை கொடுத்துவிடாது. நேராக களத்தில் களமிறங்கி தொடர்ச்சியாக பயிற்சி செய்வதன் மூலம் பிரச்சினையை சரி செய்ய வேண்ட்ம். எனவே ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக வாய்ப்புகள் பெற்று மாறுவார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை