வீரர்கள் யாரும் ஓய்வறையில் தூங்கவில்லை - ஹபீஸின் கருத்தை பொய்யாக்கிய ஹசன் அலி!

Updated: Fri, Jul 26 2024 14:23 IST
Image Source: Google

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சர்ச்சை நடந்து கொண்டே இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாட்காஸ்ட்கள் (Podcast) மற்றும் நேர்காணல்களில் தொடர்ந்து கூறிவரும் கருத்துகளே இதற்குக் காரணமாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் தற்சமயம் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்ர் முகமது ஹபீஸின் கருத்துக்கு பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கொடுத்துள்ள பதில் கருத்தானது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமில் தூங்குவது குறித்து ஹபீஸ் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அதன்படி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த இரு தொடர்களிலும் பாகிஸ்தான் அணி படுமோசமான தோல்விகளைச் சந்தித்தது.

இதனையடுத்து முகமது ஹபீஸின் பதவியையும் அத்துடன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்திருந்தது. இந்நிலையில் முகமது ஹபீஸ் சமீபத்தில் மைக்கேல் வாகன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரிடம் பாட்காஸ்டில் உரையாடினார். அதில் பேசிய் ஆவர் "டெஸ்ட் போட்டிகளின் போது வீரர்கள் தங்களது உடைமாற்று அரையில் தூங்குவதை அனுமதிக்க முடியாது. எப்போதும்  4-5 வீரர்கள் டிரஸ்ஸிங் அறையில் தூங்குகிறார்கள். ஒரு குழு இயக்குனராக நான் அதை அனுமதிக்க வேண்டுமா?” என்ற கருத்தினை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் ஹபிஸின் கருத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹசன் அலி, “உண்மையில் என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் மகமது ஹபீஸ் கூறுவது போல் டிரஸ்ஸிங் ரூமில் யாரும் தூங்கியதாக எனக்கு நினைவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராஅ முதல் டெஸ்ட் போட்டியில் நான் இடம்பிடிக்கவில்லை. மேலும் அப்போட்டியில் விளையாடத வீரர்கள் அனைவரும் டக்கவுட்டில் அமர்ந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

எங்கள் அணி நிர்வாகும் எங்களுடன் அங்கு தான் அமர்ந்திருந்தனர். ஆனால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றரை நாட்கள் பந்து வீசும்போது அதிலிருந்து அவர்கள் குணமடைய வேண்டும், அதன் காரணமாக அவர்கள் 20-30 நிமிடம் தூங்கலாம். அதிலும் குறிப்பாக தேவைப்படுபவர்கள் மட்டுமே அதனை செய்ய நினைப்பார்கள். கடந்த காலத்தில், யாரேனும் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஓய்வறையில் தூங்கலாம் என்று நிர்வாகம் அறிவித்துருந்தது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

ஆனால் கிரிக்கெட்டின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் இயக்குநரான ஹபீஸ், வீரர்கள் யாரும் தூங்க செல்லக்கூடாது என்று கூறினால் நிச்சயம் அது நிய நியாயமானது. ஒரு பயிற்சியாளராக அந்த விதியை அமைத்தால், அதை வீரர்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பயிற்சியாளராக இல்லாத ஒருவர் வீரர்களை இதை செய்ய வேண்டும் செய்ய கூடாது என கட்டளை விதிக்கமுடியாது என்பதை ஹசன் அலி மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை