இத்தொடரில் எங்களுடைய வெற்றி பயணம் தொடரும் - ஹஸ்மதுல்லா ஷாஹிதி! 

Updated: Sun, Oct 15 2023 23:04 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 13ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கி ஆஃப்கானிஸ்தான் முடிந்தளவுக்கு போராடி 49.5 ஓவரில் 284 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 80 ரன்களும் இக்ரம் அலிகில் 58 ரன்களும் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 285 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோவ் 2, டேவிட் மாலன் 32, ஜோ ரூட் 11, ஜோஸ் பட்லர் 9, சாம் கரன் 10, லியம் லிவிங்ஸ்டன் 10 என பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே ஆப்கானிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அதனால் அதனால் ஆரம்பம் முதலே அழுத்தத்தை சந்தித்த அந்த அணிக்கு 4ஆவது இடத்தில் களமிறங்கி முடிந்தளவுக்கு போராடிய இளம் வீரர் ஹாரி ப்ரூக் அதிரடியாக விளையாடி 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனாலும் 40.3 ஓவரிலேயே இங்கிலாந்தை 215 ரன்களுக்கு சுருட்டி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஅப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனார்.

மேலும் இதன் மூலம் 14 போட்டிகளுக்கு பின் உலகக் கோப்பையில் முதல் முறையாக ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள ஆஃப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் வலுவான இங்கிலாந்துக்கு எதிராகவும் முதல் வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் 280 ரன்கள் அடித்ததுமே வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை தங்களது அணி வீரர்களிடம் இருந்ததாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறிடதது பேசிய அவர், “என்னை போலவே எங்களுடைய அணி வீரர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்த வெற்றி அடுத்த போட்டிக்கு முன்பாக எங்களுக்கு பெரிய தன்னம்பிக்கையும் பெருமையும் கொடுத்துள்ளது. இதற்கான பாராட்டுக்கள் தொடக்க வீரர்களைச் சேரும். குறிப்பாக குர்பாஸ் அசத்தினார். ஆனாலும் நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம். அப்போது அசத்திய இக்ரமுக்கு கடந்த 2 வருடங்களாக நிறைய வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் நம்பி நான் கொடுத்த வாய்ப்பில் பாத்திரமாக செயல்பட்டுள்ளார்.

இந்த வகையில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னர்களுக்கு வரும் போட்டிகளிலும் பேட்டிங்கில் நல்ல ரன்களை எடுத்துக் கொடுக்க வேண்டும். மேலும் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு எதிராக இருக்காது என்பதை உணர்ந்த நான் 280 – 290 ரன்கள் எடுத்ததும் நம்மால் வெல்ல முடியும் என்று எங்களுடைய வீரர்களிடம் சொன்னேன். இது இத்தொடரில் எங்களுடைய முதல் வெற்றி கிடையாது. இன்னும் சில வெற்றிகளை நாங்கள் பதிவு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை