Punjab Kings vs Chennai Super Kings Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்விகு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.

Advertisement

PBKS vs CSK: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் -  மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், லக்னோ
  • நேரம் - ஏப்ரல் 08, இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

PBKS vs CSK Pitch Report

ஐபிஎல் 2025 தொடரின் 22ஆவது போட்டி சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் தட்டையான மேற்பரப்பைக் கொண்டுள்ளதன் காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்காது. அதன் காரணமாக இது மற்றொரு அதிக ஸ்கோரிங் ஆட்டமாக இருக்க வாய்ப்புள்ளது, மேலும் பந்து வீச்சாளர்கள் வேகத்தை மாற்றுவதையோ அல்லது வைட் யார்க்கர்களையோ நம்பியிருக்க வேண்டியிருக்கும். பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது பேட்டிங் செய்வது சற்று சாதகமாக இருக்கலாம். 

PBKS vs CSK: Where to Watch?

Advertisement

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

PBKS vs CSK Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 30
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 16
  • பஞ்சாப் கிங்ஸ் – 14

PBKS vs CSK Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - டெவன் கான்வே, பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ரச்சின் ரவீந்திர, ருதுராஜ் கெய்க்வாட், நேஹல் வதேரா
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல்
  • பந்து வீச்சாளர்கள் - லோக்கி ஃபெர்குசன், கலீல் அகமது, அர்ஷ்தீப் சிங்.
Advertisement

Punjab Kings vs Chennai Super Kings Probable Playing XI

Punjab Kings Probable Playing XI: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோனிஸ், நேஹல் வதேரா, கிளென் மேக்ஸ்வெல், ஷஷாங்க் சிங், சுயான்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், லாக்கி பெர்குசன்.

இம்பேக்ட் வீரர் - யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement

Chennai Super Kings Probable Playing XI: ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), விஜய் சங்கர், ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், நுரம் அகமது, கலீல் அகமது, மதிஷா பத்திரனா.

இம்பாக்ட் பிளேயர் - முகேஷ் குமார்/அன்ஷுல் காம்போஜ்.

PBKS vs CSK Dream11 Prediction, PBKS vs CSK, PBKS vs CSK Dream11 Team, Fantasy Cricket Tips, IPL 2025, PBKS vs CSK Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Punjab Kings vs Chennai Super Kings

Advertisement

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News