சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதன்படி இந்த் சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனையடுத்து இத்தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, இத்தொடரில் பங்கேற்று விளையாடவுள்ள 8 அணிகளும் இருதரப்பு தொடர்களில் விளையாடி தங்களை தயார் செய்து வருகின்றன. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஆஃப்கானிஸ்தானின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து தனது கணிப்பு தெரிவித்துள்ளார். அதன்படி அவர் தேர்வு செய்துள்ள அணிகள் பட்டியலில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியை தெர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி ஹஸ்மதுல்லா ஷாஹிதி, இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இவரது கணிப்பானது தற்சமயம் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது. 

மேற்கொண்டு சமீபத்தில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியதுடன், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்து அச்த்தியதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News