பஞ்சாப் அணி சாம் கரணை விடுவித்திருக்க வேண்டும் - ஏபிடி வில்லியர்ஸ்!

Updated: Sat, Dec 23 2023 12:35 IST
Image Source: Google

அண்மையில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் மிட்செல் ஸ்டார்க் ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் அணியாலும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியாலும் வாங்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் முதல் 2 இடங்களை இருவரும் பிடித்துள்ளனர்.

இவருக்கு பின் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி இங்கிலாந்து அணியின் இளம் ஆல்ரவுண்டரான சாம் கரணுக்கு ரூ.18.50 கோடி வாங்கப்பட்டதே சாதனையாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சாம் கரணை பஞ்சாப் அணி அடுத்த ஐபிஎல் தொடருக்கான தக்க வைக்கப்பட்ட வீரராக பஞ்சாப் அணி அறிவித்தது.

அவ்வளவு பெரிய தொகை கொடுக்கப்பட்டு வாங்கிய சாம் கரண், 14 போட்டிகளில் விளையாடி 276 ரன்களும் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஷிகர் தவான் காயமடைந்து வெளியேறிய போது, பஞ்சாப் அணியின் கேப்டனாக வெற்றிகளை பெற்று கொடுத்தார். இந்த நிலையில் ஐபிஎல் 2024 ஏலத்தை முன்னிட்டு பஞ்சாப் அணி சாம் கரணை விடுவித்திருக்க வேண்டும் என்று ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆர்சிபி முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், “நான் எந்த சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை. ஆனால் எனது பார்வையில் இங்கிலாந்து அணியின் சாம் கரண் கடந்த சில ஆண்டுகளாக அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டு வருவதாக நினைக்கிறேன். நிச்சயம் அவர் நல்ல திறமையான வீரர் தான். சில ஆண்டுகளுக்கு முன் சிறந்த டி20 உலகக்கோப்பையாக அவருக்கு அமைந்தது. ஆனால் சமீப கால ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்காக சாம் கரண் பெரியளவில் எந்த ஆட்டத்தையும் வெளிப்படுத்தவில்லை.

அவராலும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இது சாம் கரணுக்கு எதிராக சொல்ல வேண்டும் என்று எதுவும் கிடையாது. அவர் நிச்சயம் சிறந்த வீரர் தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவருக்கு கூடுதல் தொகையை ஐபிஎல் அணிகள் அளித்து வருகின்றன. ஒருவேளை சாம் கரணை விடுவித்திருந்தால், அவரை விடவும் சிறந்த வீரரை ஏலத்தில் வாங்கியிருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை