விராட் கோலி குறித்து கேள்வி எழுப்பாதீர்கள் - ராபின் உத்தப்பா!
விராட் கோலி கடந்த சில போட்டிகளாக சரிவர விளையாட வில்லை என்று கடும் விமர்சனங்கள் இருந்தன. விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். விராட் கோலிக்கு பதில் நன்றாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
குறிப்பாக டி20 உலக கோப்பையில் விராட் கோலி நீக்கப்பட வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக ராபின் உத்தப்பா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி சதங்களுக்கு மேல் சதங்களாக அடிக்கும் போது அவர் இப்படியெல்லாம் விளையாடக்கூடாது என யாரும் சொல்லவில்லை .
அப்படி இருக்க தற்போது அவர் எப்படி விளையாட வேண்டும் என்று பாடம் எடுக்க இங்கு நமக்கு உரிமை கிடையாது. விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசி இருகிறார். அது அனைத்தும் அவருடைய திறமையாலே வந்தது. அவரால் இன்னும் ஒரு முப்பது முப்பத்தைந்து சதங்கள் அடிக்க முடியும் .அதற்கான திறமையும் விராட் கோலி இடம் இருக்கிறது.
விராட் கோலி திறன் குறித்து கேள்வி எழுப்பாதீர்கள். அவர் ஒரு மேட்ச் வின்னர். தனது திறமையை அவர் நிறைய முறை நிரூபித்திருக்கிறார். உலகத்திலே சிறந்த கிரிக்கெட் வீரர் அவர் தான். அவருடைய திறமை குறித்து கேள்வி எழுப்ப யாருக்கும் இங்கு உரிமை இல்லை” என்று ராபின் உத்தப்பா கடுமையாக சாடியுள்ளார்.
தற்போது விராட் கோலி ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.