ரஷித் கான் ஓவரை பிரித்து மேய்ந்த கிளாசன் - வைரல் காணொளி!

Updated: Wed, Jul 26 2023 15:02 IST
Image Source: Google

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று எம்ஐ நியூயார்க் மற்றும் சியாட்டில் ஆர்காஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை வென்றால் முதல் இடத்திற்கு முன்னேற முடியும் அதே சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும். இப்படியான சூழலில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 8 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது.

முக்கியமான போட்டியில் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய சீட்டில் ஆர்காஸ் அணிக்கு தொடக்க வீரர் நௌமன் அன்வர் 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தார். ஆனால் இவரோடு சேர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் ஹென்ரிச் கிளாசனுக்கு எந்த வீரர்களிடம் இருந்தும் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

ஆனாலும் தனிப்பட்ட முறையில் நின்று மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியின் பந்துவீச்சை சிதறடித்து அபாரமாக ரன்கள் குவித்தார் கிளாசன். அவரது பேட்டில் படும் பந்துகள் பவுண்டரி எல்லைகளுக்கு காற்றிலும் தரையிலும் பறந்தன.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டின் அபாயகரமான பந்துவீச்சாளரான ஆப்கானிஸ்தான் ரஷீத் கான் 16ஆவது ஓவரை வீச வந்தார். அதுவரை அதிரடியாக மட்டுமே விளையாடி வந்த கிளாசன், ரஷீத் கானை கண்டதும் ஜெட் வேகத்தில் தனது ஆட்டத்தை மாற்றினார். ரஷித் கானின் அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 6, 6, 2, 4, 6 என 24 ரன்கள் குவித்து மிரட்டி விட்டார். 

 

ஆனாலும் அடுத்து 18ஆவது ஓவரை வீச வந்த ட்ரெண்ட் போல்ட் ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து சீட்டில் ஆர்காஸ் அணிக்கு தலைவலியை உண்டாக்கினார். ஆனாலும் அசராத கிளாஸன் மேற்கொண்டு பவுண்டரி சிக்ஸர்களை விளாசி அணியை வெற்றி பெற வைத்ததோடு, 44 பந்துகளில் ஒன்பது பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் குவித்தும் அசத்தினார். இந்நிலைல் ரஷித் கான் ஓவரில் ஹென்ரிச் கிளாசன் விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை