டி காக், ஜாண்டி ரோட்ஸ் சாதனையை சமன்செய்த ஹென்ரிச் கிளாசென்!

Updated: Sun, Mar 02 2025 10:54 IST
Image Source: Google

இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி இம்முறை பேட்டிங்கில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியில் ஜோ ரூட் 37 ரன்களையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 25 ரன்காலையும், பென் டக்கெட் 24 ரன்களையும், ஜோஸ் பட்லர் 21 ரன்கலையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 179 ரன்களில் ஆல் அவுட்டானது.

ஆதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியிலும் ஸ்டப்ஸ், ரிக்கெல்டன் ஆகியோர் சோபிக்க தவறினர். அதன்பின் களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் 64 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் வேன்டர் டுசென் 72 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணியானது 29.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறியது.

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி ஹென்ரிச் கிளாசென் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 5ஆவது முறையாக 50+ ஸ்கோரை பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் அவர் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் ஜாண்டி ரோட்ஸ் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். 

முன்னதாக 2000-01ஆம் ஆண்டில் ஜாண்டி ரோட்ஸும், 2017ஆம் ஆண்டு குயின்டன் டி காக்கும் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் தொடர்ச்சியாக ஐந்து 50+ ஸ்கோரை பதிவுசெய்து சாதனைப் படைத்திருந்த நிலையில் தற்போது ஹென்ரிச் கிளாசென் அவர்களது சாதனையை சமன்செய்துள்ளார். இந்த பட்டியளில் குயின்டன் டி காக 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 முறை 50+ ஸ்கோரை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 50+ ஸ்கோரை அடித்த வீரர்கள் (தென் ஆப்பிரிக்கா) 

  • ஜான்டி ரோட்ஸ் (2000-01) - 05
  • குயின்டன் டி காக் (2017) - 05
  • குயின்டன் டி காக் (2019) - 05
  • ஹென்ரிச் கிளாசென் (2024-25) - 05*

Also Read: Funding To Save Test Cricket

ஹென்ரிச் கிளாசெனின் கடைசி 5 ஒருநாள் இன்னிங்ஸ்

  • 86(97) vs பாகிஸ்தான், பார்ல், 2024
  • 97(74) vs பாகிஸ்தான், கேப் டவுன், 2024
  • 81(43) vs பாகிஸ்தான், ஜோஹன்னஸ்பர்க், 2024
  • 87(56) vs பாகிஸ்தான், கராச்சி, 2025
  • 64(56) vs இங்கிலாந்து, கராச்சி, 2025
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை